செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியாவில் 20 மாடுகளுடன் மூவர் கைது .

வவுனியாவில் (Vavuniya) 20 மாடுகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் பூவரசன்குளம் பகுதியில் வைத்து இன்று (08.04.2025) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா, பூவரசன்குளம் சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் , ஒரு லொறியை வழிமறித்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, குறித்த லொறியில் அனுமதிப்பத்திரம் இன்றி 20 மாடுகள் கொண்டு செல்லப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், லொறியில் இருந்த மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் 20 மாடுகளையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட 20 மாடுகள் மல்லாவி பகுதியிலிருந்து குருநாகல் பகுதிக்கு கொண்டு செல்லப்படவிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் பூவரசன்குளம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

வீட்டு திட்டத்தில் யாழ் முஸ்லிம்களுக்கு அணியாயம்

wpengine

மன்னார் மடு வலய மாணவர்களுக்கு உபகரணம் வழங்கிய சிவகரன்

wpengine

மியன்மார்,கல்கிசை சம்பவம்! ஒருவர் கைது

wpengine