பிரதான செய்திகள்

வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது! 36 இலட்சம் ரூபா

சட்டவிரோதமாக டுபாய்க்கு கொண்டு செல்ல முற்பட்ட 36 இலட்சம் ரூபா பெறுமதியான 18 கிலோகிராம் வல்லப்பட்டையுடன் ஒருவர் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே, குறித்த நபர் விமான நிலைய சுங்கப்  பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கொழும்பை சேர்ந்த 40 வயதுமிக்க ஆண் நபர் ஆவார்.

மேலும், கைப்பற்றப்பட்ட வல்லப்பட்டைகள் அரச உடைமை ஆக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்  விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

மன்னார்,அரிப்பு வீதியில் ஆட்டோ தீக்கரை! பிரதேச சபையின் அசமந்த போக்கு

wpengine

ஹக்கீமின் உயர்பீடம் சுயநல அரசியல் தேவைக்காகவே இருக்கின்றது.

wpengine

அட்டாளைச்சேனை, சாய்ந்தமருதில் ஹக்கீமுக்கு தடை! அச்சத்தில்

wpengine