Breaking
Mon. May 13th, 2024

வடக்கில் முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் செயல்த்திட்டம் இவ்வருடத்தின் முதலாவது ஒன்றுகூடல் இன்று முல்லைத்தீவில் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது.

வடக்கு மாகாணத்தில் உள்ள புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், யுத்தத்தில் தமது பிள்ளைகளை இழந்த குடும்பங்கள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள் ஆகியவர்களை வாழ்வாதாரத்தில் கட்டியெழுப்பும் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்திற்கு அமைவாக கடந்த ஆண்டு தனது அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டில் வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக 43 மில்லியன் ருபாய் நிதியை ஒதுக்கி மேற் குறித்த வகையிலே பயனாளிகள் பதிவு செய்யப்பட்ட வேளையிலே வடக்கு மாகாணம் முழுவதும் மொத்தமாக 12,494 குடும்பங்கள் பதிவு செய்திருந்த போது, விசேட தேவைகள் உடையவர்கள் என்னும் அடிப்படையில் 05 மாவட்டங்களிலும் தெரிவுகள் இடம்பெற்று,  ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 50,000/- ரூபா வீதம் வாழ்வாதார உதவித் திட்டத்தை 860 குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 147 குடும்பங்கள் வீதமும், சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் 125 குடும்பங்களுக்கும் இத்திட்டம் வழங்கப்பட்டமை அனைவரும் அறிந்ததே.

அந்த வகையிலே மீதமாக உள்ள பதிவு செய்த குடும்பங்களுக்கும், கடந்த ஆண்டு பதிவு செய்யத் தவறிய நிலையில் இந்த ஆண்டு பதிவுகளைச் செய்த குடும்பங்களுடன் ஏனைய போராட்டக் குழுக்களில் இருந்து இறந்த அங்கத்தவர்களின் குடும்பங்களின் பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டு இவ்வருட நிதி ஒதுக்கீட்டில் 25 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 குடும்பங்களைத் தெரிவு செய்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஐம்பது ஆயிரம் 50,000/= வீதம் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இருந்து 500 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, பயனாளிகளின் வாழ்வாதாரத் தேவைகள் தொடர்பான அவர்களது தெரிவிற்கான விசேட கூட்டம்  வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு, குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கடிப்படையில் விசேட தெரிவின் மூலம் தெரிவு செய்யப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 100 பயனாளிகளுக்கான தேவை மதிப்பீடு தொடர்பான முதலாவது ஒன்றுகூடல் 06-06-2016 திங்கள் காலை10.30 மணியளவில்  கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.a981870d-f345-4cc6-9282-762585104a56

இவ் விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான திட்டங்கள் தொடர்பில் பயனாளிகளிடம் இருந்து அவர்களது தேவைகள் தொடர்பிலான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அவர்களுக்கான உதவித்திட்டம் விரைவில் வழங்கப்படவுள்ளது.04061103-6082-4771-8c71-049f4b796659இவ் விசேட ஒன்றுகூடலில் முல்லைத்தீவு மாவட்ட பங்குத் தந்தை, இந்துமத குருக்கள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன், கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன், முல்லைத்தீவு மாவட்ட மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்தோடு இதேபோன்ற தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான தேவை மதிப்பீடு செய்யும் கலந்துரையாடல்கள் மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் திட்டமிடப்பட்டுள்ளதன் படியாக மன்னார் மாவட்டத்திற்க்கான கூட்டம்07-06-2016 செவ்வாய் மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்திலும், யாழ் மாவட்டத்துக்கான கூட்டம் 08-06-2016 புதன் அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சரது அலுவலகத்திலும், வவுனியா மாவட்டத்துக்கான கூட்டம் 09-06-2016 வியாழன் அன்று வவுனியா உள்ளக சுற்றுவட்ட வீதியில் உள்ள கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்திலும், கிளிநொச்சி மாவட்டத்துக்கான கூட்டம் 10-06-2016 வெள்ளி அன்று மாவட்ட செயலக பயிற்சி நிலையத்திலும் நடைபெறவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.991fcff6-113f-4fe8-b9d3-7f1588aceca6

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *