அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்கள் மற்றும் தனியார் துறையினர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் வாழ்க்கை செலவு, பயண செலவு மற்றும் தனிப்பட்ட செலவுகளின் அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் உள்ள அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தில் வாழ்வது இந்த நாட்களில் கடினமாகியுள்ளது.
2018ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அவர்கள் எதிர்பார்த்த சம்பள அதிகரிப்பு கிடைக்கவில்லை.
நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பமாகிய போது அரசாங்க ஊழியர்களுக்கு 10000 ரூபாயும், தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபாய் அதிகரிக்கப்பட்ட போதிலும் தற்போது வாழ்க்கை செலவு உட்பட ஏனைய செலவுகள் அதிகரித்துள்ளமையினால் வாழ முடியாத நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
அரசாங்க ஊழியர்களுக்காக கூட்டு சம்பள முறை ஒன்று ஏற்படுத்தப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர வரவு செலவு திட்டத்தில் நேற்று அறிவித்துள்ளார்.
எனினும் இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்களிலும் இது கூறப்பட்டதற்கு நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.