பிரதான செய்திகள்

வட மாகாண பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்றைய தினம் யாழ்ப்பாண
மாவட்ட செயலகத்திற்கு முன்பு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு வருடங்களாக பல போராட்டங்களில் ஈடுபட்டுவந்த போதிலும்,
தமது பிரச்சினையினை கவனத்தில் கொள்ளாது அரசு செயற்படுவதாக அவர்கள்
குற்றம்சாட்டியுள்ளனர்.

பட்டதாரிகளான தாம் நீண்டகாலமாக வேலையின்றி பல சிரமங்களை எதிர்
நோக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். நாடு பூராகவும் வேலையற்ற பட்டதாரிகள் உள்ள நிலையில் தற்போது கல்வி பொதுத்தராதர சாதாரண தர தகமையுடன் உள்ள தொண்டர் ஆசிரியர்களை
உள்வாங்குவதற்கான அரசின் முயற்சிக்கும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் வடக்கு மாகாணத்தின் அனைத்து பிரதேசத்திலும் உள்ள பட்டதாரிகள் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்கா,இஸ்ரேல் போன்ற நாடுகளின் சதியினால் உலகம் அழிகின்றது அமைச்சர் றிஷாட்

wpengine

இரு ஆண்கள் இணைந்து மூன்று குழந்தைகள் பெற்றெடுத்த அதிசயம்

wpengine

உலக சாதனை படைத்த 6 மாத குழந்தை (வீடியோ)

wpengine