Breaking
Sun. Nov 24th, 2024

பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது, காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் போராட்டத்தை, சுயநலத்திற்காக முன்னெடுக்கப்படும் போராட்டம் என சுமந்திரன் கூறியுள்ளார்.

காணாமலாக்கப்பட்டோரில் அதிகளவானவர்கள் அரச படைகளாலும் அரச புலனாய்வுப் பிரிவினராலும் கடத்தப்பட்டும் கைது செய்யப்பட்டும் கையளிக்கப்பட்டுமிருந்த நிலையில் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என்பதுவே உண்மை நிலை என சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், அரசாங்கத்தையும் முப்படைகளையும் பாதுகாக்கும் விதத்திலும், பிரச்சினையை திசை திருப்பும் நோக்கிலும் சுமந்திரன் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் என ஈ.பி.ஆர்.எல்.எஃப் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய அரசியல் சாசனம் தொடர்பாகவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை பிரச்சினை தொடர்பாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள், தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சுமந்திரனும், சம்பந்தனும் தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுத்து செயற்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கு இணைப்பு என்பது தமிழ் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படைகளில் ஒரு முக்கியமான விடயம், இதனை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளாமையால் தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என சம்பந்தனும் சுமந்திரனும் கூறி வருகின்ற நிலையில், வட கிழக்கு இணைப்பிற்கு தான் எதிரனாவரல்ல என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

வட கிழக்கை இணைக்க முடியாது என்ற நொண்டிச்சாட்டைக் கூறி, இப்பொழுது அது சாத்தியமில்லை என்ற பிரசாரத்தை மேற்கொள்வதற்கு சுமந்திரனுக்கு அனுமதியளித்தது யார் என அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெளிவிவகார செயலாளராகவோ வெளிவிவகார பொறுப்பாளராகவோ சுமந்திரன் கூட்டமைப்பால் ஒரு காலத்திலும் நியமிக்கப்படவில்லை எனவும் கூட்டமைப்பின் வெளிவிவகாரங்களைக் கவனிப்பதற்கு ஒரு குழுவை நியமிக்கும்படி தாம் கேட்டபோதும் நியமிக்கப்படவில்லை எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *