பிரதான செய்திகள்

வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரனால் மூடப்பட்ட வவுனியா பூங்கா

வவுனியா நகரசபை பொதுப் பூங்கா முதல் மறு அறிவித்தல் வரும்வவரை மூடப்பட்டுள்ளது.

நேற்று மாலை சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராமல் ஊஞ்சல் கீழே விழுந்து சிறுவர் ஒருவர் படுகாயமடைந்து பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று (19) காலை பொதுப் பூங்காவிற்குச் சென்ற வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் உடைந்து விழுந்த ஊஞ்சலினைப் பார்வையிட்டதுடன், பூங்கா ஒப்பந்த உரிமையாளர்களையும் அழைத்து கலந்துரையாடினார்.

அத்துடன், அங்குள்ள அனைத்து விளையாட்டு உபகரணங்களையும் மறு பரிசீலனை மேற்கொள்ளுமாறும் அதுவரையில் நகரசபை பொதுப் பூங்காவினைத் தற்காலிகமாக மூடிவிடுமாறும் தெரிவித்துள்ளார்.

மேலும், நகரசபை செயலாளருடனும் தொலைபேசியில் உரையாடி நகரசபை செயலாளரின் அனுமதியுடன் பொதுப் பூங்கா இன்று முதல் மறு அறிவித்தல் வரும்வவரை திருத்தவேலைகள் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related posts

சிம்புவிடம் இருந்து தப்பிய த்ரிஷா

wpengine

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் களமிறங்குவார் – பிரசன்ன ரனதுங்க தெரிவிப்பு!

Editor

வவுனியாவில் மனித உரிமைகள் நிகழ்வு

wpengine