Breaking
Fri. Nov 22nd, 2024

(ஊடகப்பிரிவு)

வடபுல மண்ணின் மக்களுடைய குரலாக இயங்கி இன்று வரையில் சேவையாற்றிய வருபவரும், இறுதிக்கட்ட யுத்த நிகழ்வின் பின்னர் பாதிக்கப்பட்ட பெருந்தொகையான மக்களுடைய மீள்குடியேற்றத்தில் தனது பணியை திறம்பட நிறை வேற்றியவரும் தனக்கு வழங்கும்பொறுப்புக்களை திறமையாக நிறைவேற்றிவருபவரும் தனது மக்களுக்கான சேவைகளை தூரநோக்குடன் இன்று வரையில் செய்து வரும் அமைச்சர் அல்ஹாஜ் ரிசாட் பதுரூதீன் அவர்களுக்கு மீண்டும் நீண்டகால இடம்பெயர்க்கப்பட்ட மக்களுக்கான மீள்குடியேற்ற அமைச்சு வழங்கப்பட்டமைக்காக எமது மனமார்ந்த நன்றிகளையும் ஆதரவுகளையும் புத்தள வாழ் யாழ் கிளிநொச்சி சிவில் சமூக சம்மேளனம் சார்பாக தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

வடபுல முஸ்லீம்கள் புலிகளின் ஆயுத முனை வெளியேற்றப்பட்டு இருபத்தெட்டு வருடம் கடந்துள்ளன.

இந்த நிலையில் எமது பூர்வீக இருப்பில் அசையும் அசையா பலகோடி பெறுமதியான சொத்துக்களையும் இழந்து, தன்மானத்துடன் வாழ்ந்த எம்மவர்கள இன்று வரையில் மனானசீக ரீதியான மனஉளச்சல்களுக்கும் வேதனைகளுக்கும் ஆளாகியுள்ளனர்.

மேலும் பொருளாதார ரீதியான பாரிய சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர். இந்த வகையில் முப்பது வருட யுத்தம் நாட்டின் தலைமைகளின் வழிகாட்டலினால் பெரும் தியாகத்தின் மத்தியிலும் பலஇழப்புக்களுக்குமத்தியிலும் முடிவக்கு கொண்டுவரப்பட்டள்ளன.

மக்கள் கௌரவமாகவும் தன்மானத்துடனும் அவரவர் கலாசார மரபுகளைப்பேணி ஒற்றுமையுடன் ஜனநாயக மரபுகளைப்பேணி ஒருமித்துவாழ புதிய அரசாங்கம் செயலாற்றி வருகின்றது .

இந்த வ்கையில் காத்திரமான மீழ்குடியேற்றப்பணிகள் தங்களுக்கு வழங்கியுள்ளார்கள் . எனவே இந்த நிலையிலிருந்து வடக்கு முஸ்லீமகளை கௌரவமாக மீழ்குடியேற்றுவதுடன், மேலும் வாழ்வாதார வசதிகளை வழங்குவதுடன் , இவர்கள் இழந்த அனைத்து இழப்புக்களுக்கும் நஷ்ட ஈட்டை வழங்குவதுதற்கான திட்டங்களை துரித கதியில் தங்களின் மீள்குடியேற்ற செயலணி ஊடாக நேரடியான கண்காணிப்பின் கீழ் நடைமுளைப்படுத்துமாறு அன்பாகவும் பணிவாகவும் வேண்டுகின்றோம்.

புத்தள வாழ் யாழ் கிளிநொச்சி சிவில் சமூக சம்மேளனம்
தலைவர்

அப்துல் மலிக் மௌலவி
செயலாளர் ஹஸன் பைறூஸ்

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *