வடக்கு கிழக்கு ஒன்றிணைந்தால் தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் பயணத்தை அடைந்துகொள்வது கடினமாகும். எனவே வடக்கு கிழக்கு இணைந்தால் சுதந்திரம் கிடையாது. ஆகையால் ஒரே நாடு என்ற அடிப்படையில் வாழ்ந்தால் மாத்திரமே வெற்றிகரமான பயணத்தை முன்னெடுக்க முடியும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பௌத்த மக்களுக்கு வடக்கில் விகாரைகள் நிர்மாணிப்பதற்கு உரிமையுள்ளது. அதேபோன்று இந்துக்களுக்கு தெற்கில் கோயில்கள் நிர்மாணிப்பதற்கு உரிமை உள்ளது. அனைத்து மதத்தவர்களுக்கும் தமது மத அடிப்படையில் சுதந்திரமாக வாழ்வதற்கு பூரண உரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முல்லைதீவு இளைஞர்கள் 1500 பேரிற்கு நிர்மாணத்துறை பயிற்சிக்கான உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.