தங்கக்கடன் அடகு, கடனட்டை என்பவற்றுக்கான வட்டி வீதத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை நேற்று கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடனட்டைகளுக்கான அதிகபட்ச வட்டியை 18 வீதமாக குறைப்பதற்கும், தங்கக்கடன் அடகு வட்டியை 10 வீதமாக குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வங்கி மேலதிக பற்றுக்கான வட்டி 16 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி பேணுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நிலையான வைப்புக்கான வட்டி 4.5 வீதமாகவும் நிலையான சலுகை கடன் வட்டி வீதம் 5.5 வீதமாகவும் காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.