பிரதான செய்திகள்

வங்காலை மீனவர்களுக்கு கடல்பாசி வளர்ப்புத்திட்டம் -டெனிஸ்வரன்

(முகநுால்)

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்க்குட்பட்ட வங்காலை கிராமத்தில் உள்ள மக்களுக்கு வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சினால்  கடற்ப்பாசி வளர்ப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் நேற்று (06-03-2016) ஞாயிறு மாலை 5 மணியளவில் வங்காலைக் கிராமத்துக்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் அங்குள்ள மக்களை சந்தித்து சுமார் 25 பயனாளிகளுக்கு திட்டத்துக்கான மூலப்பொருட்களை வழங்கிவைத்தார்.12802831_10208652713104386_1545159602317902821_n

நிகழ்விற்கு வங்காலைப் பங்குத் தந்தை அருட் தந்தை எஸ்.ஜெயபாலன் அவர்களும், வங்காலைக் கிராமிய மீனவர் அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர், ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.12814543_10208652716864480_4436153899218134959_n

Related posts

பல்கலைக்கழகங்களின் கற்பித்தல் செயற்பாடுகள் ஏப்ரல் 17இல் மீள ஆரம்பம்!

Editor

கிழக்கு அரச பல்கலைக்கழகங்களில் சட்டபீடம் அமைப்பது பொருத்தமானதாக அமையும் நிசாம் காரியப்பர் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

Maash

மனிதாபிமானம் அற்றவர்கள் மின்சார சபை ஊழியர்! அமைச்சர் கண்டனம்

wpengine