ஒமிக்ரான் கொரோனா பிரிவின் 32 பிறழ்வுகள் இதுவரையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை, டெல்டா மற்றும் அல்பா திரிபுகளின் பிறழ்வுகளை விடவும் அதிகமாகுமென அறியமுடிகின்றது.
இதனை கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் தொடர்பான நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹா உறுதிப்படுத்தியுள்ளார்.
அடையாளம் காணப்பட்டுள்ள திரிபின் எட்டு பிறழ்வுகள் றம்புட்டான் பழத் தோற்றத்தை கொண்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை டெல்டா பிறழ்வு பரவுவதை விடவும் வேகமாக பரவுமென அடையாளம் காணப்பட்டுள்ளது.