உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ரஷ்யா,அமெரிக்கா போட்டி! 755 அமெரிக்க அதிகாரிகள் வெளியேற்றம்

அமெரிக்க தூதரக அதிகாரிகள் 755 பேர் உடனடியாக ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அபாயகரமானதாக விளங்குவதாகவும், அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் பலவீனப்படுத்துவதாகவும் ரஷியா, ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீது குற்றச்சாட்டு அங்கு கூறப்படுகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டதாகவும், உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது ராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் கூறி அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அதன்படி, மேற்கண்ட நாடுகள் மீதான பொருளாதார தடை விதிப்பதற்கான மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதிபர் டிரம்ப்பின் கையெழுத்திற்காக அனுப்பப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கையால் கோபமடைந்துள்ள ரஷ்யா, இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளில் 755 பேர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவில் சுமார் 1000-க்கும் அதிகமான அமெரிக்க தூதரக அதிகாரிகள் தற்போது பணியாற்றி வருகின்றனர்.

அமெரிக்கா – ரஷ்யா இடையே ஏற்கனவே பல்வேறு விவகாரங்களில் பனிப்போர் நிலவும் சூழ்நிலையில், தற்போது இந்த விவகாரம் இரு நாடுகளுக்கிடையே மோதலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

அவதணம் ! வடக்கில் ஆசை வார்த்தைகளை கூறி ஆள்கடத்தல்கள் அதிகரிப்பு .

Maash

சுயநல அரசியல் கபட நாடகத்திற்காக ரிசாட் பதியுதீனை போடுகாயாக பயன்படுத்தி வருகின்றனர்.

wpengine

கள்ளச்சாராயம் காய்ச்சினால் மரண தண்டனை! பீகாரில்

wpengine