பிரதான செய்திகள்

ரமழான் தலை பிறை மாநாடு! 6ஆம் திகதி மாலை

ஹிஜ்ரி 1437, ரமழான் மாதத்தின் தலைப்­பிறை பற்றி தீர்­மா­னிக்கும் நாள் எதிர்­வரும் 6 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை மாலை செவ்வாய் இர­வாகும்.

 

எனவே அன்­றைய தினம் மாலை மஃரிப் தொழுகை நேர­மான 6.24 மணி­முதல் ரமழான் மாதத்தின் தலைப்­பி­றையைப் பார்க்­கு­மாறு கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் அனைத்து முஸ்­லிம்­க­ளையும் வேண்­டி­யுள்­ளது.

பிறை கண்­ட­வர்கள் தகுந்த ஆதா­ரத்­துடன் நேரில் அல்­லது இங்கு குறிப்­பி­டப்­பட்­டுள்ள தொலை­பேசி இலக்­கங்கள்: 011 5234044, 011 2432110, 077 7316415 ஒன்­றிற்கு  அறியத் தரு­மாறும் தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை ரமழான் மாதத்தின் தலைப்­பி­றையைத் தீர்­மா­னிக்கும் மாநாடு எதிர்­வரும் 6 ஆம் திகதி மஃரிப் தொழு­கையைத் தொடர்ந்து நடை­பெ­ற­வுள்­ளது.

இம் மாநாட்டில் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய கலா­சார திணைக்­கள பிர­தி­நி­திகள் என்போர் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

இது தொடர்­பான விப­ரங்­களை இன்று குப்தா பிர­சங்­கத்­திலும் 6 ஆம் திகதி மாலை மஃரிப் தொழு­கையின் பின்பும் அறி­விப்புச் செய்யும் படி அனைத்து பள்ளிவாசல் நிர்வாகங்களும் வேண்டப்பட்டுள்ளன.

Related posts

பேஸ்புக் வேலைக்கு 10லச்சம் கொடுக்கும் சஜித்,கோத்தா

wpengine

உயிர் இருக்கும்வரை சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு சஜின் வாஸ்

wpengine

அமைச்சர் றிஷாட்டின் அமைச்சின் ஊடாக வவுனியா யுவதிகளுக்கு தொழில் பயிற்சி

wpengine