பிரதான செய்திகள்

யாழ். வைத்தியசாலையில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!-வைத்தியசாலை பணிப்பாளர்-

யாழ். போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெறும் நோயாளர்களை பார்க்க வரும் உறவினர்கள் போதை மாத்திரைகள், மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களை எடுத்து வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டீ.சத்யமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்களின் பயணப் பைகளை சோதனையிடுகையிலேயே இவ்வாறு போதைப்பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

வைத்தியசாலைக்குள் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் இப்பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதன்போது, 3 மதுபான போத்தல்கள்;, ஒருதொகை போதைப்பொருள் மற்றும் போதை கலந்த வெற்றிலை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வலுப்படுத்தியுள்ளார்.

wpengine

தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (13) முதல் எதிர்வரும் திகதி 17 திகதி வரை

wpengine

அரசாங்கத்திற்கு எதிராக களம் இறங்க உள்ள முத்தட்டுவே ஆனந்த தேரர்

wpengine