Breaking
Tue. May 14th, 2024

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று மின்சாரம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக மின்சாரம் தடைப்பட செய்யப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை யாழ். குடநாட்டின் மானிப்பாயின் ஒரு பகுதி, பிறவுண் வீதி, புகையிரதக் கடவையிலிருந்து தட்டாதெருச் சந்தி வரையான பிறவுண் வீதி, நாச்சிமார் கோவிலிலிருந்து சிவன் கோவில் வரையான கே.கே.எஸ். வீதி, ஐந்து சந்தியிலிருந்து இலுப்பையடிச் சந்தி வரையான நாவலர் வீதி, அரசடி வீதிச் சந்தியிலிருந்து ஸ்ரான்லி வீதிச் சந்தி வரையான கஸ்தூரியார் வீதி, ஓட்டுமடம் சந்தியிலிருந்து கே.கே.எஸ். வீதி வரையான மானிப்பாய் வீதி, அசாத் வீதி, வி.ஏ. தம்பி லேன், பிரப்பங்குளம் வீதி, பொன்னப்பா வீதி, சிவலிங்கப் புளியடி, கன்னாதிட்டி, மணிக்கூட்டு வீதி, சிவன் பண்ணை வீதி, காதி அபூபக்கர் வீதி, கம்பஸ் லேன், இராமநாதன் வீதி, அரசடி வீதி, வைமன் வீதி, கோவில் வீதி ஆகிய பகுதியில் மின் தடைப்படவுள்ளது.

ஆஸ்பத்திரி வீதி, மார்ட்டின் வீதிச் சந்தியிலிருந்து ஏ-9 வீதி வரை, நல்லூர் கோவிலடி, றக்கா வீதி, மருதடி வீதி, சுண்டிக்குளி, பஸ்ரியன் சந்தியிலிருந்து பாரதி வீதிச் சந்தி வரை, கச்சேரி கிழக்கு ஒழுங்கை, தலங்காவில், திருநெல்வேலி, பரமேஸ்வராச் சந்தி, சிவன் அம்மன் வீதி, கந்தர்மடம், இலுப்பையடிச் சந்தி, நாக விகாரையிலிருந்து பாரதியார் சிலை வரையான பருத்தித் துறை வீதி, விக்ரோறியா வீதி, மின்சார நிலைய வீதியில் ஒரு பகுதி, புகையிரத நிலையப் பிரதேசம், மார்ட்டின் வீதி, யாழ். 2 ஆம்,3 ஆம், 4ஆம் குறுக்குத் தெருக்கள் போன்ற பகுதிகளில் இன்று மின்விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரதக் கடவையிலிருந்து இராசாவின் தோட்ட வீதி வரையான ஸ்ரான்லி வீதி, அம்பலவாணர் வீதி, அன்னசத்திர வீதி, வேம்படிச் சந்தியிலிருந்து மார்ட்டின் வீதி வரையான ஆஸ்பத்திரி வீதி, ஆரியகுளத்திலிருந்து முட்டாசுக்கடைச் சந்தி வரையான ஸ்ரான்லி வீதி, கஸ்தூரியார் வீதியின் ஒரு பகுதி, மணிக்கூட்டு வீதியில் ஒரு பகுதி போன்ற பகுதிகளில் மின் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

தொழில்நுட்பக் கல்லூரி, பல்கலைக்கழக கல்லூரி, ஹரிகரன் அச்சகம் பிறைவேற் லிமிட்டெட், அண்ணாமலையான் சிறி இராகவேந்திரா என்ர பிறைசஸ் பிறைவேற் லிமிற்றெட், Northern Industries, கன்னாதிட்டி கார்கில்ஸ் பூட் சிற்றி, யாழ். பல்கலைக்கழக ஆண்கள் விடுதி, யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடம், ஆளுநர் தங்கும் விடுதி, ஆளுநர் செயலாளர் அலுவலகம், யாழ். மாவட்டச் செயலாளர் அலுவலகம், பெனிசுலா புறப்பர்ட்டி டெவலப்பர்ஸ் பிறைவேற் லிமிற்றெட்(துளசி மஹால்), றக்கா வீதியிலுள்ள பிரிட்டிஷ் கவுன்சில் அலுவலகம், நாவலர் வீதியிலுள்ள தியாகி அறக் கொடை நிலையம், US ஹோட்டல், இலங்கை மின்சார சபையின் பிரதிப் பொதுமுகாமையாளர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் தடைப்படவுள்ளது.

நொதேர்ண் சென்றல் கொஸ்பிற்றல், பலாலி வீதியில் டம்றோ காட்சியறை ஹற்றன் நஷனல் வங்கியின் பிராந்திய அலுவலகம், ஸ்ரான்லி வீதியிலுள்ள பீப்பிள் லீசிங் அன் பினான்ஸ் கம்பனி, AVNOR பிறைவேற் லிமிற்றேட், ஸ்ரான்லி வீதியிலுள்ள மக்கள் வங்கி, சிறுநதியா நகை மாளிகை, Raja Talkies, LOLC, ரொப்பாஸ், நுணாவில், கைதடி, நாவற்குழி, மறவன்புலோ, தச்சன் தோப்பு, தனங்கிளப்பு, கோகிலாக்கண்டி, கேரதீவு வீதி, அறுகுவேலி, பனைவள ஆராய்ச்சி நிலையம், கைதடி யுனைரட் மோட்டர்ஸ், கைதடி வடமாகாண சபை அலுவலகம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைசெய்யப்படவுள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை மன்னார் மாவட்டத்தில் உயிலங்குளத்திலிருந்து தலைமன்னார் வரை, வங்காலை கடற்படை முகாம், வங்காலை நீர்ப்பாசனத் திணைக்களம், அடம்பன் நீர்ப்பாசன சபை, கமலாம்பிகை அரிசி ஆலை, மாந்தை உப்பு உற்பத்தி நிலையம், மன்னார் C.T.B, கீரி ஐஸ் தொழிற்சாலை, மன்னார் வைத்தியசாலை, மன்னார் நீர்ப்பாசனத் திணைக்களம், மன்னார் தொலைத் தொடர்பு நிலையம், ஆவேமரியா ஐஸ் தொழிற்சாலை, ரைமெக்ஸ் கார்மெனட், விசேட அதிரடிப்படை முகாம், எருக்கலம்பிட்டி பம் ஹவுஸ், பேசாலை Palmayrah House, வங்காலைப்பாடு ஐஸ் தொழிற்சாலை, பேசாலை ஐஸ் தொழிற்சாலை, மீன்பிடி சமாசம், அந்தோனிப்பிள்ளை ஐஸ் தொழிற்சாலை, கூல்மென் ஐஸ் தொழிற்சாலை, தலைமன்னார் வைத்தியசாலை, தலைமன்னார் கடற்படை முகாம், சீனத் துறைமுகம் ஆகிய பகுதிகளிலும் மின் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தகவல் வழங்கியுள்ளார்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கிளிநொச்சி மாவட்டத்தின் செல்வாநகர், புதுமுறிப்பு, ஊற்றுப்புலம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் கூறியுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *