பிரதான செய்திகள்

யாழில் வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – குடத்தனை பகுதி கடற்கரையில் இருந்து ஒரு பகுதி வெடி பொருட்கள் பருத்திதுறைப் பொலிஸாரால் நேற்று (23) மீட்கப்பட்டுள்ளது.

குடத்தனை வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள பொது காணி ஒன்றில் இருந்தே குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையில் நீல நிற பிளாஸ்டிக் எண்ணெய் பரல் ஒன்றில் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது மீட்கப்பட்ட வெடி பொருட்கள் மற்றும் துப்பாக்கி என்பன உயிர்த்த்துடிப்புடன் இயங்கு நிலையில் காணப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்கே தெரிவித்தார்.

இதன்போது ரி – 56 ரக துப்பாக்கி இரண்டு, அதற்கான மகசின் எட்டு, 30 பொட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 750 தோட்டாகள் மற்றும் 82 ரக கையெறிகுண்டு – 08 என்பன மீட்கப்பட்டுள்ளது.

வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் மஹிந்த குணரட்னே, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத், கே.கே.எஸ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன ஹமகே, உதவி பொலிஸ் அத்தியட்சகர்களான ஹேமந்த விஜயரட்ண, டயல் இலங்ககோன் ஆகியோரின் வழிகாட்டுதலில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த வெடிபொருட்கள் போர்காலத்தில் புதைத்து வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Related posts

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine

முன்னால் அமைச்சர் விமலின் 2 தண்டனை! ஒரு இலட்சம் அபராதம்.

wpengine

ஏறாவூர் இரட்டைக்கொலை : சந்தேக நபர்கள் அறுவரின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine