பிரதான செய்திகள்

யானைக்குட்டி விவகாரம்! உடுவே தம்மாலோக தேரர் பிணையில் விடுதலை

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டி ஒன்றை வைத்திருந்த கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உடுவே தம்மாலோக தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
60 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையில் அவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலஞ்சென்ற அஸ்கிரி பீட மகாநாயக்கர் வணக்கத்துக்குரிய கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் எனக்கூறிய உடுவே தம்மாலோக தேரரின் சட்டத்தரணி அவருக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றை கோரியிருந்தார்.

விடயங்களை பரிசீலனை செய்து பார்த்த கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி நிஷாந்த பீரிஸ் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Related posts

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைகிறது!

Editor

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்யும் ஜனாதிபதி!

Editor

அமைச்சு பதவியினை இழக்கும் அமைச்சர்கள்

wpengine