பிரதான செய்திகள்

மு.கா.வின் வட்டார பிரிப்பு தரமிக்கதாக இருக்குமா?

“ கிழக்கு மாகாண அமைச்சராக இருந்த நீங்கள், அதனை பார்த்துக்கொண்டா இருந்தீர்கள்? அதனை வட்ஸ்அப் அல்லது முக நூலில் இடுமாறு கூறுகிறார்கள். தேவைப்படுபவர்கள் என்னை சந்தித்து பார்த்துக்கொள்ள முடியும். நீங்கள் ஆவணங்களை கண்ட மாதிரி காட்சிப் படுத்த கேட்க வேண்டாம். காட்சிப் படுத்த வேண்டிய எவ்வாறான ஆவணங்கள் இருந்தாலும், அதனை விமர்சிப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கத்தான் போகிறது. இதனை எவ்வாறு அறிவு பூர்வமாக செய்திருந்தாலும் கூட“

இது பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர், கடந்த வெள்ளிக்கிழமை சியா சந்தியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய வரிகளாகும். இன்று சம்மாந்துறையில், சம்மாந்துறையின் முன்னாள் தவிசாளர் நௌசாத் பிரித்ததாக கூறப்படும் வட்டாரங்கள் பிழையாக பிரிக்கப்பட்டுள்ளது என கூறி பலத்த விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. அந் நிலையில் கயர் பள்ளிக்கு அருகாமையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் வைத்து சம்மாந்துறையின் முன்னாள் தவிசாளர் நௌசாத், மு.கா பிரித்த வட்டார பிரிப்பை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். சமூக வலைத் தளங்களிலும் இது பற்றிய கேள்விகள் அதிகரித்துள்ளன. இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரே இப்படி பதில் அளித்திருந்தார்.

இந்த வார்த்தைகள் முன்னாள் தவிசாளர் நௌசாத் மீது முன் வைக்கப்படும் பல விமர்சனங்களுக்கு பதிலாக அமைகிறது. நாம் ஒருவர் மீது விமர்சனங்களை முன் வைப்பதாக இருந்தால், நாம் குறித்த விடயத்தில் சரியாக நடந்திருக்க வேண்டும். குறித்த வட்டார பிரிப்பு விடயத்தில் மு.கா சரியாக செயற்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாக அமைந்திருந்தாலும் அவர்கள் பிரித்த வட்டாரப்பிரிப்பாவது சரியாக அமைந்துள்ளதா என்றாவது பார்க்க வேண்டும். அவர்களது வட்டாரப் பிரிப்பு எவ்வாறு அமைந்துள்ளது என கேட்டால், மக்களின் விமர்சனங்களுக்கு அஞ்சி, அதனை வெளியிட மாட்டார்கள் என அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை தொகுதி அமைப்பாளருமான மன்சூரே குறிப்பிடுகிறார்.

நன்றாக சிந்தித்து பாருங்கள்..!

அவ் வட்டார பிரிப்பை வெளியிட்டால் மக்கள் தங்களை விமர்சிப்பார்களாம். தாங்கள் பிரித்த வட்டார பிரிப்பை விமர்சனங்களுக்கு அஞ்சி, வெளியிட மறுப்பவர்கள், அதனை தரமிக்க வகையில் பிரித்திருப்பார்களா? அவர்கள் எந்த வகையில் முன்னாள் தவிசாளர் நௌசாதை குறை கூற தகுதியானவர்கள்? முன்னாள் தவிசாளர் நௌசாதை குறை கூறுபவர்கள், நெஞ்சை நிமிர்த்தி தங்களது வட்டாரப் பிரிப்பை வெளியிட வேண்டும். இப்படி விமர்சனங்களுக்கு அஞ்சுபவர்களல்ல.

விரைவில்
தற்போது பிரிக்கப்பட்டுள்ள வட்டார பிரிப்பு சம்மாந்துறையின் முன்னாள் தவிசாளர் நௌசாதினுடையதா?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Related posts

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் வாழமுடியாத சூழல் உருவாக்கப்படுகிறது – சி.சிறீதரன்

wpengine

கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால் பாலியல் பலாத்காரம் அதிகரிக்கும்!

wpengine

அளும் கட்சி இராஜங்க அமைச்சர்களுக்கிடையில் முரண்பாடு! உன்னை கடுமையாக தாக்குவேன்.

wpengine