பிரதான செய்திகள்

முஸ்லிம்,தமிழ் மக்களின் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைப்போம்.

பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் மூன்றில் இரண்டுக்கும் அதிகமாக வாக்கினை பெற்று பலமான அரசாங்கத்தை அமைக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.


பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


ஐக்கிய தேசிய கட்சியின் முரண்பாடுகள் தற்போது தீவிரமடைந்ததுள்ளன. ரணில் அணி, சஜித் அணி என்ற இரு வேறுப்பட்ட தரப்பினர் ஒன்றினைந்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றிப்பெற முடியாது.


ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொண்ட வாக்குகள் பொதுத்தேர்தலில் அவர்கள் பெறும் வாக்கினை முன்கூட்டியே தெரியப்படுத்தியுள்ளது.


ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி தேர்தலில் ஒன்றினைந்து பெற்றுக் கொண்ட வாக்கினை காட்டிலும் மிக குறைவான வாக்கினை பெற்று படுதோல்வி அடையும்.


தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் பொதுஜன பெரமுன பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்கினை பெற்று பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் .


பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த தேர்தல் தொகுதிகளில் பொதுத்தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கான திட்டங்கள் முறையாக வகுக்கப்பட்டுள்ளன. தமிழ், முஸ்லிம் மக்கள் இம்முறை பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்குவார்கள். என்ற நம்பிக்கை உள்ளது. என்றார்.

Related posts

யாழ் பல்கலைக்கழக துப்பாக்கி சூடு! தமிழ் மக்கள் பேரவையின் கண்டனம்

wpengine

சமூக விடிவுக்காக ஒருமித்து பயணிக்கவும் தயார் தோப்பூரில் அமைச்சர் றிஷாட்

wpengine

சிலர் வாழ்நாள் முழுவதும் வழக்கு பேசிக் கொண்டிருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும்

wpengine