Breaking
Fri. Apr 26th, 2024

(Masihudeen Inamullah)

வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் பாசிசப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப் பட்டு மூன்று தசாப்தங்கள் கழிந்த நிலையிலும் அவர்களது மீள் குடியேற்றம் குறித்து ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும்.

போருக்குப் பின்னரான இலங்கையில் பழைய IDP கள் என அவர்கள் புறந்தள்ளப்பட்டு மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் உடனடியாக பாதிப்படைந்தவர்கள் என புதிய IDP கள் மீது மாத்திரமே கூடிய கரிசனை காட்டப் படுகின்றமை நாம்அறிந்த விடயமாகும்.
இனி, தற்போதைய கூட்டாட்சியில் நம்பிக்கை தரும் முன்னெடுப்புக்கள் இடம்பெறுமா என அவர்கள் ஆவலோடு காத்திருக்கின்றார்கள்.

அண்மையில் நடந்த உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றின் பொழுது தெரிவிக்கப்பட்ட சில தகவல்கள் கவலை தரக் கூடியனவாக இருந்தன.

இடம் பெயர்ந்துள்ள முஸ்லிம்கள், அவர்களது சனத்தொகைப் பெருக்கம், அதிகரித்துள்ள புதிய குடும்பங்கள், அவர்களில் மீள்குடியேற விரும்புபவர்கள் என இன்னோரன்ன தகவல்கள் முறையாக இதுவரை ஆவணப் படுத்தப்படவில்லை.

அரசாங்க அதிபர்களூடாக மீள் குடியேற்ற அமைச்சர் பெற்றுள்ளதாக கூறப்படும் தரவுகள், முஸ்லிம் அமைச்சர்கள் முன்வைக்கும் தரவுகள் என்பவற்றிற்கிடையில் பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன.

அதேபோல் வடபுலத்தில் உரிய உட்கட்டமைப்பு வசதிகள், பொது வசதிகள், நீர் வழங்கல், மின்சாரம், பாடசாலைகள் , மஸ்ஜிதுகள்,அரச நிறுவனங்கள் என எத்தகைய அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் மீள் குடியேறுவதில் மக்கள் காட்டும் அசிரத்தை முறையான பதிவுகள் இல்லாமைக்கு காரணமாக இருப்பதாக சொல்லப்படுகின்றது.

புதிய தலைமுறையினரின், கல்வி, தொழில் தற்போதைய வதிவிடங்கள், தாம் ஈட்டிய அசையா சொத்துக்கள் எனபல்வேறு அம்சங்களும் மீள் குடியேறுவதில் கரிசனயின்மையை ஏற்படுத்தியுள்ளமை அவதானிக்கப்படுகின்றது.
எது எப்படிப் போனாலும் வடபுலத்தில் இருந்து புலம் பெயர்ந்த ஒவ்வொரு பிரஜையும், குடும்பமும், அவகளது புதிய தலைமுறையினரும் தமது பூர்வீக இடங்களுக்கும் வளங்களுக்கும் உரித்துடையவர்கள் என்பதனை வலியுறுத்திக் கூறல் வேண்டும்.

உடனடியாக மீள்குடியேற வேண்டிய முஸ்லிம்கள் குறித்த துள்ளியமான தரவுகளை புள்ளி விபரங்களை திரட்டுவதும் ஆவணப்படுத்துவதும் அதற்காக அரச யந்திரத்தை வளங்களை உரியவகையில் பெற்றுக் கொள்வதும் முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் தலைமகளின் முதன்மையான பணியாகும்.

அன்று இடம் பெயர்ந்த குடும்பங்ளாயினும் சரி, புதிய தலை முறையினராயினும் சரி உடனடியாக தம்மை தததமது பிரதேச செயகங்களூடாக முறையாக பதிவு செய்து கொள்ளாவிடின் காலம் கடந்த பின்னர் கைசேதப்படும் நிலை ஏற்படலாம்.

தற்போதைய பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் எம். எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களும் முன்னாள் மீள்குடியற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களும் அதே போன்று ஏனைய முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற மாகாணசபை உறுப்பினர்கள் இது தொடர்பாக உடனடி கவனம் செலுத்துவார்கள் என நம்புகின்றோம்.

1990 அக்டோபர் 30 ஆம் நாள் ஒட்டு மொத்த வடபுலத்து முஸ்லிம்களும் விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் மூன்று தசாப்த காலம் அவர்கள் பெயரில் நாம் அரசியல் செய்திருக்கின்றோம், மாறாக அவர்களுக்கு எம்மால் ஆக்கபூர்வமாக எதையுமே செய்யமுடியவில்லை!

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *