(NDPHR ஊடக பிரிவு)
முஸ்லிம்களுக்கு தலைமைத்துவம் அரசியல் ரீதியில் தேவை இல்லை, என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் வாவா குறிப்பிட்டா, அவர் கூறுகையில் சமய உரிமைகள் மற்றும் மார்க்க அனுசரணைகள் ரீதியான பிரச்சினைகளை அகில இலங்கை ஜாமியத்துல் உலமா சபை பார்த்துக் கொள்ள வேண்டும் , இச் சபை உரிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ,மாற்று மதப் பெரியார்களிடம் தொடர்புகளை கொண்டு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் .இச் சபையை முஸ்லிம்கள் உள்ளூர் , மற்றும் சர்வதேச ரீதயில் பலப்படுத்த வேண்டும்.
மற்றைய முஸ்லிம்களின் பிரச்சினைகளான,வேலைவாய்ப்பு,பி ரதேச அபிவிருத்தி போன்றவற்றை அந்த பிரதேசத்தை சேர்ந்த பாராளுமன்றப் பிரதிநிதிகள் பார்த்துக் கொள்ள வேண்டும் . இப் பிரதிநிதிகள் மூவினத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் பிரதேசரீதியில் அது அவர்களது கடமை , ஏன் எனில் அவர்கள் இவர்களது வாக்குகளைப் பெற்றவர்கள். முஸ்லிம்கள் இலங்கையில் பல பாகம்களிலும் சிதறுண்டு சில இடங்களில் சிறு பான்மையாகவும் சில பகுதிகளில் பெரும் பான்மையாகவும் வாழ்கின்றனர் ,இதன் நிமித்தம் இவர்கள் மூவினத்தோடும் இணைந்து வாழ வேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர்
தற்போதுள்ள இனவாத அரசியல்வாதிகளினால் இலங்கை வாழ் சகல பகுதிகளிலும் வாழும் முஸ்லிம்கள் பலவகையான பல் வேறுபட்ட இக்கட்டான இன்னல்களை அனுபவிக்கின்றனர் என்பது கண்கூடு.
இதன் மூலம் சமய அறிவு அற்ற ,பதவி ஆசையுள்ள ,அதிகார வெறி கொண்ட அரசியல் வாதிகளை ஓரம் கட்ட முடியும் அது மட்டும் அல்ல இவ் அரசியல் வாதிகள் பதவிகளில் தற்காலிகமாணவர்களே ஆதலால் முஸ்லிம் சமூகம் இலங்கை ஜாமியத்துல் உலமா சபையைப் பலப் படுத்துவதன் மூலம் பல பாரிய பலன்களையும் ,சமூக ஒற்றுமையும் பெற்றுக் கொள்ள முடியும்.