பிரதான செய்திகள்

முள்ளிவட்டுவான் தரசேன நீர்ப்பாசன திணைக்களத்தின் நடவடிக்கையால் விவசாயிகள் பாதிப்பு

(அனா)
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் உள்ள முள்ளிவட்டுவான், கல்வளை மற்றும் அடம்படிவட்டுவான் விவசாய கண்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் முறையாக நீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கோறி நேற்று முள்ளிவட்டுவான் தரசேன பகுதியில் நீர்ப்பாசன திணைக்களத்திற்கு எதிராக சுலோகங்களை ஏந்தி தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

நீர் குறைவாக உள்ள காலப்பகுதியில் வாகனேரி குளத்திற்கான நீர்ப்பாசனம் வழங்கும் போது எக்காரணம் கொண்டும் புனானை அனைக்கட்டு கதவுகளை திறக்கக்கூடாது என்று பொது சபை தீர்மானம் உள்ளது அதே போன்று மாதுறுஓயா தீர்மானமும் உள்ளது இவ்வாறு தீர்மானம் இருக்கும் போது புனானை அனைக்கட்டு கதவுகளை திறப்பதன் காரணமாக வாகனேரி குளத்தினை மாத்திரம் நம்பி விவசாயம் செய்யும் இரண்டாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களைக் கொண்ட விவசாயிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு பல தடவை எழுத்து மூலம் தெரிவித்தும் அவர்கள் எங்களது பிரச்சினைகளை கருத்திற்கொள்ளாது செயற்படுவது விவசாயிகளான எங்களுக்கு மிகவும் கவலையழிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதே வேலை 1990ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை முள்ளிவட்டுவான் மற்றும் அடம்படி வட்டுவான் விவசாய கண்டங்களைச் சேர்ந்த னு – 01இ டுஏஇ வாய்க்காலுக்கான வான்கதவுகள் திருத்தம் செய்யப்படால் பழுதடைந்து காணப்படுவதாகவும் இதனை திருத்தம் செய்து தரும்படி கோறிக்கை விடுத்த விவசாயிகள் தங்களது பிரதேசத்தில் மாடு மற்றும் யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும் இதனை நிவர்த்தி செய்து தருவதற்கு மின்சார வேலிகளை அமைத்து தருமாரு உரிய அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்வதாகவும் கோறிக்கை விடுத்தனர்.

Related posts

கல்லாறு கடற்கரை பகுதியில் கேரளா கஞ்சாப்பொதிகளை கைப்பற்றிய மன்னார் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர்

wpengine

முகநூல் தொடர்பாக இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. 

wpengine

லங்கா சதொசயில் இறப்பர் அரிசி விற்பனை செய்யவில்லை! தலைவர் டி.எம்.பி.தென்னகோன்

wpengine