பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவு யுவதி 1500 மீற்றர் ஓட்ட போட்டியில் தேசிய ரீதியில் வெற்றி

முல்லைத்தீவு யுவதி சசிகுமார் சரணியா 1500 மீற்றர் ஓட்ட போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.


தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம்தோறும் நடத்துகின்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 31ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த 27-02ஆம் திகதி வடமத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.


அந்த வகையில் இன்றைய தினம் (01-03-2020) இடம்பெற்ற 20 வயதுக்குட்பட்ட பிரிவில் 1500 மீற்றர் ஓட்ட நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சசிகுமார் சரணியா 3ஆம் இடத்தினை பெற்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் வடமாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார் .

Related posts

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடாத்த திறைசேரியிடம் மீண்டும் பணம் கேட்கும் ஆணைக்குழு!

Editor

ஐ.தே.க எதிராக மைத்திரி கருத்து! இரவு பலரை சந்தித்தார்.

wpengine

வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு பணமில்லை தேர்தலும் சந்தேகம்!

Editor