முல்லைத்தீவு பனிக்கன்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக வியாழக்கிழமை(24) மீட்கப்பட்டுள்ளனர்
உசாகரன் மாலினி( வயது 38) தாய் மற்றும் உசாகரன் மிக்சா ( வயது 11) மகள் உசாகரன் சதுசா (வயது 04) ஆகியவர்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

றித்த கிணற்றின் அருகில் வியாழக்கிழமை(24) அதிகாலை கான் பேக் ஒன்றும் இதர பொருட்கள் சிலவும் காணப்பட்டதை அடுத்து ஊரில் உள்ள மக்கள் அந்த விடயம் தொடர்பாக கிராம அலுவலர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் அங்கு வருகை தந்த கிராம அலுவலர் மற்றும் பொலிஸார் கிணற்றில் சடலங்கள் இருப்பதை அடையாளம் கண்டனர்.

இவர்கள் உயிர் மாய்த்துக் கொண்டார்களா அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
