பிரதான செய்திகள்

முன்னால் அமைச்சர் ஹக்கீம்,றிஷாட்,மனோ ரணில் சர்வ கட்சி அரசுக்கு ஆதரவு

சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கை

ஜனாதிபதி, அடுத்த இரு வாரங்களுக்குள் சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார்.

மேலும், சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒன்றிணையுமாறு நேற்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பும் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கட்சிகளுடன் ஜனாதிபதி நேரில் கலந்துரையாடி வருகின்றார்.

இதற்கமைய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் நேற்றுமுன்தினம் அவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அக்கட்சியும் சாதக சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் சம்பிக்க ரணவக்க எம்.பியும் சாதகமான நிலைப்பாட்டிலேயே உள்ளார்.

இந்நிலையிலேயே மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியும், ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் மற்றும் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ரணிலுக்கு நேசக்கரம் நீட்டவுள்ளன.

Related posts

உள்ளூராட்சி நிர்வாகத்தை சுமூகமான நடத்துவதற்கு ஒத்துழைப்பு வேண்டும்

wpengine

மன்னாரில் கட்டுப்பணம் செலுத்தியது! தமிழ் காங்கிரஸ்

wpengine

65 ஆயிரம் பொருத்து வீடுகள் தொடர்பில் குற்றச்சாட்டு!

wpengine