பிரதான செய்திகள்

முன்னால் அமைச்சர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை

2018 ஒக்டோபர் 28 இல் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பான வழக்கில், முன்னாள் கொழும்பு மாநகரசபை ஆணையாளர், குலதிஸ்ஸா கீக்கியானகே உள்ளிட்ட பத்து பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.


இந்த உத்தரவை கொழும்பு தலைமை நீதிபதி மொஹமட் மிஹைர் பிறப்பித்துள்ளார்.


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது, வழக்கின் முதல் சாட்சியாக பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து கொழும்பு தலைமை நீதவான் அவரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.


இந்நிலையில், குறித்த வழக்கு டிசம்பர் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.


இந்த சம்பவத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், 34 வயது நபர் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


2018ம் ஆண்டு தெமட்டகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


அவர் 2018ம் ஆண்டு கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார், இதன்போது கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே அவரை, ரூபா 5 இலட்சம் கொண்ட சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாச்சியாதீவு மக்களின் அச்சத்தை நீக்குமாறு பிரதிப்பொலிஸ்மா அதிபரிம் றிஷாட் கோரிக்கை

wpengine

ரோஹிங்கிய முஸ்லிம்களிடம் தோல்வி அடைந்த ஐ.நா

wpengine

பொருளாதார நிலையம் கூட்டமைப்புக்குள் முரண்பாடு

wpengine