பிரதான செய்திகள்

முதலைக்கு பலியான பாத்திமா மிஸ்பரா 14வயது சிறுமி

திருகோணமலை, தோப்பூர் உல்லைக்குளத்தில் நீராடிக் கொண்டிருந்த தரம் 08ல் கல்வி கற்கும் 14 வயது சிறுமி ஒருவரை முதலை பிடித்துச் சென்றதில் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை தனது 15 வயதுடைய மைத்துனியுடன் உல்லைக்குளத்திற்கு நீராடச்சென்ற வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முதலை இழுத்துச் சென்ற குறித்த சிறுமியை காப்பாற்ற மைத்துனி எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், வீட்டாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் பின்னர் சிறுமியின் சடலம் கிடைக்கப் பெற்றுள்ளது.

தோப்பூர், இக்பால் நகர் பிரதேசத்தைச் சேர்ந்த, அல் ஸிபா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முஹம்மத் பாத்திமா மிஸ்பரா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் உடல் தற்போது தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

பச்சை மிளகாய் ஒருகிலோ கிராம் 1,200 ரூபாய்க்கு விற்பனை

Maash

தன்னுயிரை கொடுத்து 7 பேரின் உயிர் காத்த குருணாகலை சேர்ந்த பாடசாலை மாணவி!

Editor

எனது ஆட்சியில் 4 வீத வட்டியில் கடன் வழங்கப்படும் சஜித்

wpengine