பிரதான செய்திகள்

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு புதிய வர்த்தகமானி அறிவித்தல்

முச்சக்கர வண்டிகளின் வேகத்தை மணிக்கு 40 கிலோ மீற்றர் வரை கட்டுப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை கொண்டு வரவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

அத்துடன் முச்சக்கர வண்டிகளுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்கும் போது பயிற்சி பாசறையின் பின்னர் அதனை வழங்க வழி செய்யும் வகையிலான விடயங்களும் வர்த்தமானியில் உள்ளடக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அம்பாந்தோட்டை ஹூங்கம லுனம பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

அந்த முச்சக்கர வண்டியில் 5 பேர் ஏற்றி செல்லப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் குயில்வத்தை பகுதியில் மூன்று முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் மோதியதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாது ஒரு முச்சக்கர வண்டி புரண்டு, மேலும் இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த நிலையில், அதிகரித்து வரும் முச்சக்கர வண்டி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வேகக் கட்டுப்பாடு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட உள்ளதாகவும் கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சிலாபம் நகரில் பதற்றம் ! ஊரடங்கு சட்டம்

wpengine

பிரபாகரனின் சடலத்தை அடையாளம் காட்டினார் கருணா- மஹிந்த

wpengine

அரகலய இழப்பீடு பெற்றவர்கள் சொத்து விபரங்களை நாடாளுமன்றில் வழங்கியுள்ளனரா? விசாரணை ஆரம்பம் .

Maash