மீள்குடியேற்றம் மற்றும் பூனர்வாழ்வு அமைச்சின் ஊடாக கடந்த வருட இறுதிப்பகுதியில் கொடுக்கப்பட்ட வாழ்வாதாரத்தில் பல ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக தெரிவித்து இன்று காலை மன்னார்,சிலாவத்துறை கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் உடனான குழுவினர் ஊழல் லஞ்ச மோசடிகள் ஆணைக்குழு மற்றும் பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சிடம் முறைப்பாடு ஓன்றினை பதிவு செய்து உள்ளதாக அறியமுடிகின்றது.
இந்த வாழ்வாதாரத்தில் சுமார் 300க்கு மேற்பட்ட பயனாளிகள் என்றும் ஒவ்வெரு பயனாளிகளுக்கும் தலா 100000 ஒரு லச்ச ரூபா பெறுமதியான தொகை கொடுக்க வேண்டும் ஆனால் முசலி பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட வாழ்வாத தொகை உரிய முறையில் பயனாளிகளுக்கு சென்று அடையவில்லை என்றும் இன்றும் சிலருக்கு வாழ்வாதாரத்தில் பெயர் உள்வாங்கப்பட்டும் பெறுமதியான பொருட்கள் கிடைக்கவில்லையென்றும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
மேலும் அறிகையில்;