பிரதான செய்திகள்

முசலி பிரதேச சபை ஊழியர்களுக்கிடையில் மோதல்

மன்னார்,முசலி பிரதேச சபையில் ஊழியராக கடமையாற்றும் இரண்டு உத்தியோகத்தர்களுக்கிடையில் சண்டை ஒன்று இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

வட மாகாண சபையின் ஊடாக ஒதுக்கப்பட்ட தெரு விளக்குகள் பொறுத்தும் வேலையில் ஈடுபடுகின்ற போது பிரதேச சபையில் சாரதியாக தொழில் புரியும் ஒருவருக்கும் அது போன்று சபையில் மின் விளக்குகளை பொறுத்தும் ஊழியருக்கும் இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கம் பெரிய விடயமாக மாற்றம் பெற்று இருவருக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளாதாகவும் தெரிவித்தார்.

தெரு விளக்கு பொறுத்தும் ஊழியர் தாக்கப்பட்டு தற்போது சிலாவத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.என அறியமுடிகின்றன

இது தொடர்பில் சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாடு ஒன்று இடம்பெற்றுள்ளாதாகவும் அறியமுடிகின்றன.

Related posts

உத்தரவு வழங்கிய உடனேயே காணிகள் விடுவிக்கப்பட்டதா ?

wpengine

வங்கி கடன் வட்டி 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படவுள்ளன.

wpengine

அரசாங்கம் தமிழ்,முஸ்லிம் மக்களை மறந்து பயணிக்கமுடியாது.

wpengine