Breaking
Sat. Apr 27th, 2024

ஆடை உற்பத்தித் துறையில் வருடாந்தம் ஏற்றுமதி வருமானமாக ஐந்து பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை பெற்றுக்கொள்கிறது என்றும், நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் இது நாப்பது சதவீதமாகும் எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

௦7 ஆவது டெக்ஸ்டெக் ஸ்ரீலங்கா 2016 – சர்வதேச எக்ஸ்போ கண்காட்சியை கொழும்பு டி.ஆ  ர் விஜேவர்தன மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா கண்காட்சி கேட்போர் கூட மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைத்த பின்னர் அங்கு இடம்பெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.  d3406c1d-234b-4d6e-b27a-a82853b7b832

இந்தக் கண்காட்சி நிகழ்வில் இந்தியத் தூதரக முதலாவது செயலாளர் கார்த்திக் பிரபாத் உட்பட வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.

அமைச்சர் இங்கு கூறியதாவது,

ஒரே கூரையின் கீழ் ஆடை உற்பத்திப் பொருட்களையும், புடவை உற்பத்திப் பொருட்களையும் கண்காட்சிக்கு வைத்து, வாடிக்கையாளர்களையும், இந்தத் துறையில் ஆர்வம் கொண்டுள்ளோர்களையும் சந்திக்க வைத்த ஏற்பாட்டாளர்களை நான் பாராட்டுகின்றேன்.c878b70e-109d-4400-93f0-004b7667e8f6

இந்தக் கண்காட்சிகள் மூலம் நாட்டின் ஏற்றுமதித் துறை முன்னேற்றமடையும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன். இலங்கைக்கு  எதிர்காலத்தில் ஜிஎஸ்பி பிளஸ்ஸும் இலங்கைக்கு கிடைக்க உள்ளது.

சர்வதேச கொள்வனவாளர்கள் இந்தத் துறையில் மேலும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் புடவை ஏற்றுமதித் துறையிலும், ஆடைக் கைத்தொழில் துறையிலும் ஈடுபட்டு வரும் முதலீட்டாளர்கள் தமது தொழிற்திறனை இன்னும் விரிவாக்க ஆர்வம் வேண்டும்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சு கைத்தொழில் துறையிலும் ஏற்றுமதி வர்த்தகத்திலும் எதிர்காலத்தில் முன்னேற்றம் அடைவதற்கான அனைத்துவிதமான அனுசரணைகளையும் உதவிகளையும் வழங்குவதோடு அந்தத் துறையை மேம்படுத்த தன்னாலான அத்தனை பங்களிப்புகளையும் நல்கி வருகின்றது.

தனியார் துறை, வர்த்தக அமைப்புக்கள், வியாபார சங்கங்கள் ஆகியவற்றுடன் தொடர்ச்சியான பேச்சு வார்த்தைகளை நடத்துவதோடு இறுக்கமான தொடர்புகளையும் பேணி வருகின்றது. அத்துடன் அவற்றினுடைய ஆலோசனைகளையும்,கருத்துக்களையும் பெற்று வருகின்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *