பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேசத்தில் மீண்டும் கிறிஷ்தவ சிலை! தூங்கும் முசலி பிரதேச சபை நிர்வாகம்

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு சொந்தமான மரிச்சிக்கட்டி கிராம சேவையாளர் பிரிவுக்கு சொந்தமான பகுதியில் இன்று காலை கிறிஷ்தவ சிலை ஒன்றினை நிறுவியுள்ளார்கள் என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

சிலாவத்துறை மரிச்சிக்கட்டி பிரதான வீதிக்கு அருகாமையில் இந்த சிலை அமைக்கபெற்றுள்ளதாகவும்.அந்த பகுதியில் அதிகமான இஸ்லாமிய மக்கள் 100  வீதம் செறிந்து வசித்துவருவதாகவும் அறியமுடிகின்றன.

இது போன்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நானாட்டான் அருவியாற்று பகுதியிலும் இவ்வாறான சிலையினை இனம் தெரியாதவர்கள் நிறுவியுள்ளார்கள் எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வட மாகாணத்தில் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்தில் இவ்வாறான சதி வேளையில் ஈடுபடும் இனவாத சிந்தனைகொண்டவர்களை இனம்கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கையினை விடுத்துள்ளார்கள்.

இந்த கிறிஷ்தவ சிலையினை அகற்ற முசலி பிரதேச சபை  இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையினை மேற்கொள்ளாமல் சபையின் நிர்வாகத்தினர்கள் இதுவரையில் தூங்கியுள்ளார்கள் என அறியமுடிகின்றன.

பிரதான வீதியில் எதுவிதமான சிலையினை அமைக்க கூடாது என்று இலங்கை அரசாங்கம் சுற்றுநிருபங்களை வெளியிட்டுள்ளன.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மன்னார் மாவட்ட செயலக அபிவிருத்தி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சிலையினை அகற்ற மன்னார் மாவட்ட செயலகம்,முசலி பிரதேச செயலகம்,முசலி பிரதேச சபை,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Related posts

வவுனியாவில் புதுவருட வியாபாரம் பாதிப்பு

wpengine

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அமைச்சர் ரிஷாட் அவசரக் கடிதம்!

wpengine

நாங்கள் ஒரே கல்லில் இரண்டு குருவிகளை வீழ்த்துவோம்.

wpengine