பிரதான செய்திகள்

முசலி-கொக்குப்படையான் குடிநீர் வினியோக திட்டத்தின் அவலநிலை! கவனம் செலுத்தாத பிரதேச சபை (படங்கள்)

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபைக்குட்பட்ட கொக்குடையான் கிராமத்தில் அமைக்கபெற்ற குடிநீர் வினியோக திட்டம் கடந்த பல வருடகாலமாக பராமரிப்பு அற்ற நிலையிலும், இயங்காத நிலை காணப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றேன்.

மேலும் தெரிவிக்கையில்;

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ்சவின் ஆட்சி காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக கொக்குபடையான்,சிலாவத்துறை மற்றும் அகத்திமுறிப்பு ஆகிய கிராமங்களில் உள்ள மக்களின் குடிநீர் பிரச்சினையினை தீர்த்து வைக்கும் நோக்குடன் முன்று குடிநீர் வினியோக திட்டம் ஆரம்பித்து வைத்ததாகவும், அதில் சிலாவத்துறை,அகத்திமுறிப்பு குடிநீர் திட்டம்  ஒரு நாளை சில மணி நேரம் இயங்குவதாகவும் கொக்குபடையான் நீர் திட்டம் இதுவரைக்கும் இயங்கவில்லை என்றும் பல லச்சம் ரூபா பணம் செலவு செய்து உருவாக்கப்பட்ட திட்டம் அழிந்து போவதாகவும்,முசலி பிரதேச சபை கவனம் செலுத்தவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.cfb0d55b-24d1-45c9-9e01-a3471b7d4985

முசலி பிரதேசத்தில் குடிநீர் பிரச்சினை பாரிய பிரச்சினையாக இருந்து வருவதாகவும் இதற்கு உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் என்று தெரிவித்தனர்.f6f74147-fd3c-43f1-a5b4-c8a628b6e0aa

Related posts

இலங்கை பயணம்! கனடா எச்சரிக்கை -அட்மிரல் ஜயநாத் கொலம்பகே

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

நான் கண்ட தலைவன் றிஷாட் பதியுதீன்….

wpengine