பிரதான செய்திகள்

மீறாவோடையில் இடம்பெற்ற முப்பெரும் விழா

(அனா)
இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்குடா அல் கிம்மா சமுக சேவை நிறுவனத்தின் அனுசரனையில் யுத் ஸ்டார் விளையாட்டு கழகத்தினால் முப்பெரும் நிகழ்வினை மீறாவோடை அல் ஹிதாயா வித்தியாலய மைதானத்தில் நேற்று (05.02.2017) மாலை இடம் பெற்றது.

கழகத்தின் தலைவர் ஐ.எல்.பதுர்தீன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்தின கலந்து கொண்டதுடன் அதிதியாக அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் எம்.எம்.எஸ்.ஹாறூன் கலந்து கொண்டார்.

இதன் போது பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதோடு நிறந்தர நோயாளிகளுக்கான கொடுப்பணவு வழங்கப்பட்டதோடு ஐநூறு பேருக்கு இலவசமாக மூக்கு கண்ணாடியும் வழங்கி வைக்கப்பட்டது.

பிரதேச பாடசாலை மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதோடு பிரதம அதிதி பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்தின பொண்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

Related posts

அக்குரனை நகருக்குள் புகுந்த வெள்ளம்.!

wpengine

சமூகங்களுக்கிடையில் எந்தப்பிரச்சனைகளும் பிளவுகளும் வராமல் பாதுகாத்து வருகின்றோம்.

wpengine

பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம்.

wpengine