பிரதான செய்திகள்

மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவினர் மாகாண சுகாதார அமைச்சருடன் சந்திப்பு

(எம்.ரீ. ஹைதர் அலி)

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ. ஏ.எல்.எம். நஸீர் அவர்களை மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவின் உபதலைவரான அஷ்ஷெய்க். எஸ்.எச்.எம். அறபாத் (ஸஹ்வி) அவர்களின் தலைமையில் சென்ற குழுவினர் 2016.09.22ஆந்திகதி (நேற்று) திருகோணமலையில் அமைந்துள்ள சுகாதார அமைச்சு காரியாலயத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடினர்.  

இச்சந்திப்பில் அபிவிருத்தி குழு உறுப்பினர்களால் சுகாதார அமைச்சருக்கு இவ்வைத்தியசாலையில் நிலவும் ஆளணி பற்றாக்குறை தொடர்பாக வைத்தியர்கள், தாதி, குடும்ப நல உத்தியோகத்தர் மற்றும் காவலாளி போன்ற வெற்றிடங்களுக்கு ஆளணிகளை பெற்றுத்தருமாறும் ஆளணி பற்றாக்குறை காரணமாக இங்கு சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் சரியான முறையில் சிகிச்சை பெறமுடியாமல் பல்வேறுபட்ட அசௌகரியங்களையும், இன்னல்களையும் அனுபவித்து வருவதாகவும், இவ்வைத்தியசாலையினால் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் பெரிதும் பயன்பெருவதாகவும் அபிவிருத்தி குழு உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இச்சந்திப்பானது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களின் முயற்சியினால் நடைபெற்றதோடு, தான் அடிக்கடி இவ்வைத்தியசாலைக்கு விஜயங்களை மேற்கொண்ட வகையில் இவ்வைத்திசாலையில் ஆளணி பற்றாக்குறைகள் காணப்படுவதாகவும் இவ்வருடத்திற்குள் ஓரளவேனும் இவ்வைத்தியசாலையில் காணப்படும் ஆளணி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து கொடுக்குமாறும் சுகாதார அமைச்சரிடம் மாகாண சபை உறுப்பினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க சுகாதார அமைச்சரினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.unnamed-4

Related posts

இடம்பெயர்ந்த மக்களின் நிதியில் “கைவைக்க” வேண்டாம் றிஷாட் சபாநாயகரிடம் கோரிக்கை

wpengine

பிரபுடன் எனக்கொரு அழகான உறவு இருந்தது. அது மிக அழகான தருணம்.குஷ்பு

wpengine

“சகல மாணவர்களுக்கும் உயர்தரம் பிழையான முடிவு”

wpengine