உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

மீன் போல் பிறந்த குழந்தை! பலர் அதிசயம்

ஹைதராபாத்தில் பெட்லாபுர் மகப்பேறு மருத்துவமனையில், ஆங்கிலத்தில் மெர்மெய்ட் சின்ட்ரோம் என்றழைக்கப்படும் மீன் போன்ற உடலமைப்புடன் பிறந்த குழந்தை, இரண்டு மணி நேரத்தில் உயிரிழந்தது.

கடந் புதன்கிழமை இரவு 7 மணிக்கு இந்தக் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், பிறந்த இரண்டு மணி நேரத்தில், குழந்தைக்கு பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை அறிவியல்பூர்வமாக, சிரெனோமேலியா என்று கூறுகிறார்கள். அதாவது, முதுகெலும்பும், குழந்தையின் கால் எலும்புகளும் தனித்தனியாகப் பிரியாமல் ஒன்றாகவே இணைந்து உருவாவதால் ஏற்படும் பிரச்னை.

இதற்கு முன்பு, இதுபோன்ற பிரச்னையை எதிர்கொண்டதில்லை என்பதால், இது மிகவும் சிக்கலாக மாறியதாகவும் மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

Related posts

மன்னார் மாணவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்! பாக்கீர் அதிதி

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

அமைச்சர் றிஷாட் வழங்கும் வீட்டு திட்டத்தை தடுக்க சிங்கள ஊடகம் முயற்சி! ராஜிதவிடம் கேள்வி

wpengine