Breaking
Fri. Nov 22nd, 2024

மின்னல் ரங்கா- முஸ்லிம் சமூகத்தின் பரமவைரி. அந்தச் சமூகத்தைச் சார்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளை முட்டி மோதவிட்டு அவர்களுக்கிடையேயுள்ள பிரச்சினைகளை பூதாகரப்படுத்தி குழப்பங்களை உருவாக்குவதில் இன்பம் காண்பவன். அதுமட்டுமன்றி முஸ்லிம் சமூகத்துக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதன் மூலம் ரங்கா விஷேட வெகுமதிகளையும் அவ்வப்போது பெற்றுக் கொண்டு வருவது பரமரகசியம்.

தோட்ட மக்களை ஏமாற்றி வயிற்றுப்பிழைப்பு நடாத்திய ரங்காவுக்கு ரிஷாட் என்றால் வேப்பங்காய். றிசாட்டை வீழ்த்த வேண்டும் என்று அவன் எடுத்த பகீரத முயற்சிகள் கடந்த காலங்களில் தோல்வியிலேயே முடிந்தது. றிஷாட்டுடன் இறைவன் இருப்பதால் அவன் எல்லா முயற்சிகளிலும் மூக்குடைபட்டுவந்துள்ளான். அலரி மாளிகைச் சுவரில் வைத்து அவனுக்கு றிஷாட் அவனது கன்னத்தில் மின்னல் போல் அறைந்து சாத்து சாத்தென்று சாத்தியதை இன்னும் மறந்திருக்கி நியாயமில்லை. இது பழைய கதை. இப்போது வைத்தியர் ஒருவர் ரங்காவுக்கு மனநோயாளி என்ற மருத்துவச் சான்றிதழை வழங்கியிருப்பது புதிய கதை.

மின்னல் ரங்கா தனது குரங்;குப் புத்தியை மீண்டும் காட்டத் தொடங்கியிருக்கின்றான். இதற்காக அவன் தேர்ந்தெடுத்த பாத்திரம் தேசியப்பட்டியல் புகழ் வை.எல்.எஸ். ஹமீட். பாராளுமன்ற உறுப்பினர் என்ற எண்ணம் நிறைவேறாததால் கனவிலும் நனவிலும் றிசாட்டையே தூற்றி வந்த மக்கள் காங்கிரசின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட், இப்போது றிஷாட் எதிர்ப்புப்படலத்தை மிகவும் உக்கிரமாக தொடங்கியுள்ளார். அதற்குக் காரணம் றிசாட்டின் அமைச்சின் கீழான லங்கா அசோக் லேலன்ட் கம்பனியின் தலைவர் பதவியை அரசாங்கம் பறித்தெடுத்த கடுப்பே. எனவே அவர் றிசாட்டைப் பற்றி இல்லாத பொல்லாத விடயங்களை பரப்பி வருகிறார். தான் சொகுசாக பதவியில் இருந்து அனுபவித்த காலங்களில் றிஷாட்டைப் பற்றி புகழாரம் சூட்டி வந்த வை.எல்.எஸ். இப்போது வில்பத்துவில் றிஷாட்டுக்கு 600 ஏக்கருக்கு மேல் காணிகள் இருப்பதாகவும் அடித்துக் கூறி வருகிறார். இதே வில்பத்து விடயம் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுந்த போது வக்காலத்து வாங்கிய வை.எல்.எஸ் இப்போது நாக்குப் புரண்டு உளறுகிறார்.

அசோக் லேலன்ட் தலைவர் பதவி பறிபோகப் போகும் தறுவாயில் அதனை காப்பாற்றித் தந்தால் செயலாளர் பதவியை விட்டுத் தருகிறேன் என்று அவர் தூதனுப்பியதை மறந்திருக்க நியாயமில்லை. இப்போது றிஷாட்டை வசைபாட வை.எல்.எஸ். ஐ

ஒரு சிறந்த ஆயுதமாக பயன்படுத்த ரங்கா தொடங்கியுள்ளான்.

அது மட்டுமன்றி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானையும் தனது தீய வலைக்குள் சிக்க வைக்க முயற்சி மேற்கொள்கின்றான் இந்த ரங்கா. வை.எல்.எஸ். க்கும் மஸ்தானுக்கும் இடையிலான நெருக்கத்தை பயன்படுத்தி இந்த முயற்சியில் வெற்றி காணலாம் என நினைக்கின்றான். வில்பத்து பிரச்சினை எழுந்த போது வன்னியில் பிறந்த மஸ்தான் எம்.பி, வில்பத்துடன் தொடர்பில்லாத அதனைப்பற்றி அதிகளவில் அறிந்திராத கல்முனையில் பிறந்த வை.எல்.எஸ். யிடம் அது தொடர்பில் தனக்கு படிப்பித்து தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தமையையும் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தம். வை.எல்.எஸ். வில்பத்து தொடர்பான அறிக்கை ஒன்றில் மஸ்தான் எம்.பி தன்னிடம் இது தொடர்பில் அறிவூட்டுமாறு கோரி இருந்தமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *