உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

மியன்மாரில் 15 வருடங்களுக்குப் பின்னர் மக்களால் ஜனாதிபதியொருவர் தெரிவு

கடந்த 15 ஆண்டுகளாக மியன்மாரில் நிலவிய இராணுவ ஆட்சியின் பின்னர் முதற்கதடவையாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மியன்மாரின் புதிய ஜனாதிபதியாக ஹ்டின் க்யாவ் அந்நாட்டு பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மியன்மாரின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகியின் நெருங்கிய ஆதரவாளராக ஹ்டின் க்யாவ் செயற்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

மக்களால் ஜனாதிபதியொருவர் நியமிக்கப்பட்டமை ஜனநாயகத்திற்காய் போராடிய ஆங்சாங் சூகியின் வெற்றியென ஜனாதிபதியாக தேரந்தெடுக்கப்பட்ட ஹ்டின் க்யாவ் தெரிவித்துள்ளார்.

Related posts

அவசர நிலமையின் போது அழைப்பதற்கு புதிய இலக்கம் 117 அறிமுகம்

wpengine

முன்னால் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக குரல் கொடுக்கும் தென்னிலங்கை அரசியல்வாதி ஒருவர்

wpengine

கரும்பு உற்பத்தியாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்-ரிஷாட், ஹக்கீம்

wpengine