அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் திங்கட்கிழமை (14) காலை 7.30 முதல் 12.00 மணிவரை பள்ளிவாசல் வளாகம் நடைபெற்றது.
நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வைத்தியர் எம்.எச்.கே. சனூஸ் காரியப்பர் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக், சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரியபள்ளி வாசலின் செயலாளரும் பொறியியலாளருமான எம்.எம்.எம். முனாஸ், சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் தலைவரும் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பிரதி தலைவரும் முபாறக் டெக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எம்.எஸ். எம். முபாறக்,சாய்ந்தமருது ஜம்மியத்தில் உலமா சபை தலைவர் மெளலவி எம்.எம்.எம்.சலீம், பேராசிரியர் எம்.ஐ.எம்.ஹிலால், டாக்டர் ஏ.எம். மிஸ்பாஹ், டாக்டர் ஏ.எல்.எம்.நளீம், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களான பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.சுல்பிகார், சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.பர்ஹான், ஏ.எம்.நஜீம், ஓய்வுபெற்ற புகையிரத திணைக்கள உத்தியோகத்தர் ஏ.எல்.எசார் உள்ளிட்ட சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை பிரதிநிதிகளுக்கும் பங்கேற்றிருந்தனர்.
இன்று எமது சமூகத்தில் தொற்றா நோய்களான மாரடைப்பு உயர் குருதியமுக்கம் போன்றன இளம் வயதிலேயே பொதுமக்களை கொல்லும் நோய்களாக காணப்படுகின்றன. ஆகவே ஆரம்பத்திலேயே இந்நோய்களை கண்டுபிடிப்பதன் மூலமாக இந்த நோய்களின் அகோர தன்மையை சமூகத்தில் களையக் கூடியதாக இருக்கும்.அதன் அடிப்படையில் இதன் போது இலவச மருத்துவ முகாமில் இரத்தத்தில் சீனி (FBS), இரத்த அழுத்த (BP)பரிசோதனை,உடல் நிறை குறியீட்டெண் (BMI) மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது எனவும் எமது பள்ளிவாசல் நிர்வாகம் இம்முறை பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து மக்கள் பயன் பெறுவதற்காக இவ்வாறான மருத்துவ முகாம் மற்றும் ஏனைய பல்வேறு விடயங்களை எதிர்காலத்தில் நடாத்தவுள்ளது. அத்துடன் இம்மருத்துவ முகாமில் பல பகுதிகளில் இருந்தும் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டமை எமக்கு உற்சாகத்தை வழங்கியுள்ளது என நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வைத்தியர் எம்.எச்.கே. சனூஸ் காரியப்பர் தெரிவித்தார்.
குறித்த இலவச மருத்துவ முகாமில் இரத்த அழுத்தம் இரத்தத்தில் சீனியின் அளவு, மிகையான உடற்பருமன் , பொது வைத்தியம் உட்பட பல வைத்திய சிகிச்சைக்கான ஆலோசனைகளை 200 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள், வர்த்தகர்கள், பெண்கள் கலந்துகொண்டு பயன்களைப் பெற்றனர்.அத்துடன் இலவச மருத்துவ முகாமில் வைத்திய அதிகாரிகள் , சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் , உத்தியோகத்தர்கள், ஊழியர்களும், கலந்து கொண்டனர்.
அத்துடன் இலவச வைத்திய முகாமுக்கு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பன பூரண ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.