மாணிக்கமடு மாயக்கல்லியில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்கு வெசாக் புனித தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை விசேட பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டன.
மாயக்கல்லி மலையில் புத்தர் சிலைக்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் இதற்கு எந்தத் தடைகளையும் விதிக்கவில்லை.
இது தொடர்பில் அம்பாறை வித்தியானந்த பிரிவெனாவின் அம்பேபிட்டிய சீலரத்ன தேரர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்;
பூஜை வழிபாடுகளுக்காக சுமார் 80 பக்தர்கள் வருகை தந்தனர்.
இதில் அரைவாசிப்பேர் மதகுருமார்களாவார்கள். அமைதியான முறையில் வழிபாடுகளும் இடம்பெற்றன. எவ்வித எதிர்ப்புகளையும் எதிர்நோக்கவில்லை.
மாலை 5.30 மணியளவில் வழிபாடுகள் நடத்தப்பட்டன சுமார் 10 பொலிஸார் கடமையில் இருந்தார்கள் என்றார்.