பிரதான செய்திகள்விளையாட்டு

மாகாண மட்டத்தில் முதலிடம்! உதைப்பந்தாட்ட வீராங்கனை கௌரவித்த ஹிஸ்புல்லாஹ்

கிழக்கு மாகாணமட்ட மகளிர் உதைப்பந்தாட்டப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்த மட்டக்களப்பு மாவட்ட மகளிர் உதைப்பந்தாட்ட அணி வீராங்கனைகளை கௌரவித்து சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் மட்டு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை, கொக்கட்டிச்சோலை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி தினேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைத்ததுடன், மகளிர் உதைப்பந்தாட்ட அணியை சிறப்பாக வழிநடத்திய பயிற்றுவிப்பாளருக்கு கௌரவிப்பு பரிசும் வழங்கினார்.unnamed-8

இதன் போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டுத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும், எதிர்காலத்தில் மட்டு மாவட்டத்தில் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு விசேட திட்டங்களை வகுக்கவுள்ளதாகவும் – தெரிவித்தார்.unnamed-7

Related posts

பாடசாலைகளை விட்டு விலகிச் செல்லும் மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி!

Editor

GCE O/L பரீட்சையை நிறுத்தி உயர்தரம் கற்கும் வாய்ப்பை வழங்குங்கள்!-பாராளுமன்றில் டலஸ்-

Editor

மோசடி வெளிவந்தால் அமைச்சு பதவிக்கு ஆபத்து அமைச்சர் ஹக்கீம்

wpengine