Breaking
Sun. May 12th, 2024

(முகுசீன் றயீசுத்தீன்)

மாகாண சபை தேர்தல் எல்லை நிர்ணயக் குழுவின் மன்னார் மாவட்ட மக்கள் அபிப்பிராய அமர்வு நேற்று மாலை மன்னார் கச்சேரியில் இடம்பெற்றது. குழுவின் தலைவர் உட்பட 5 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

சுமார் 30 பொதுமக்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் சுமார் 15 பேர் கருத்துத் தெரிவித்தனர். குறிப்பாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக – முசலி முஸ்லிம்கள் அதிகமாக கலந்து கொண்டனர்.

மன்னார் மாவட்டத்திற்கான 5 உறுப்பினர்களில் 3 தொகுதி அடிப்படையில் தெரிவு செய்யப்பட வேண்டும். இத்தொகுதி பிரிப்பு தொடர்பாகவே  பொதுமக்களின் கருத்துப் பெறப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு தொகுதி அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அதிகளவில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதில் குறிப்பாக முசலியை மையப்படுத்திய கருத்துக்களே விவகாரமாக எதிரொலித்தது. முசலியையும் மடுவையும் சேர்த்து ஒரு தொகுதியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயபூர்வமாக முன்வைக்கப்பட்டது.

ஆணைக்குழுவில் தலைவர் உட்பட 2 தமிழர்களும் 2 சிங்களவர்களும் ஒரு முஸ்லிமும் உள்ளனர். பெரும்பாலும் இரு தமிழ் உறுப்பினர்களுமே கூட்டத்தை வழிநடத்தினர்.

ஒரு பொதுமகனுக்கு ஒதுக்கப்பட்ட 10 நிமிட நேரத்தில் அடிக்கடி குறுக்கீடுகளை செய்து சரிவரக் கருத்துச் சொல்ல விடவில்லை. உறுப்பினர்கள் தமது அறிவுப் புலமையை ஆத்திரப்படுவதிலும் ஆதிக்கம் செலுத்துவதிலுமே காட்டினர்.

2012 ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்புப்படியே தாங்கள் இதை செய்ய வேண்டியுள்ளதாக இரு உறுப்பினர்களும் சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதற்காக தலைவர் வருத்தம் தெரிவித்தார்.

வட மாகாண சபையில் முஸ்லிம்களுடைய பிரதிநிதித்துவம் பாதிக்கப்படப்போவது பெரும்பாலும் உறுதியாகி விட்டதாகவே கருத முடிகிறது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *