Breaking
Sat. May 18th, 2024

வடக்­குத் தமி­ழரை விட­வும் மகிந்­தவே புலி­கள் மீண்­டும் வரு­வதை அதி­கம் விரும்­பு­ கின்­றார். புலி­கள் இல்­லை­யென்­றால் அவ­ரால் அர­சி­யல் செய்ய முடி­யாது. புலி­கள் மீண்­டும் வரு­வார்­கள் என்ற பயத்தை மகிந்த தெற்­கில் உரு­வாக்­கிக்­கொண்டு இருக்­கின்­றார் என்று மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் தலை­வர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த நாட்டை மாறிமாறி ஆட்சி செய்த இரண்டு கட்சிகளும் தங்களது இயலாமையை நிரூபித்துள்ளன. அமைச்சர்களே மரத்தை வெட்டுகின்றார்கள்; மண்ணை அள்ளுகின்றார்கள்; வாகன வரி அனுமதியை விற்கின்றார்கள்;கோடி கோடியாகக் கொள்ளையடிக்கின்றனர். இவர்களால் எப்படி நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும்.

எதையாவது செய்து அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். எதையாவது செய்து ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் முயற்சி செய்கின்றனர். ஆட்சியைப் பிடிப்பது, ஆட்சியைத் தக்கவைப்பது மாத்திரமே இவர்களின் நோக்கம். நாட்டின் எதிர்காலம் பற்றி இவர்களுக்கு சிறிதளவேணும் அக்கறையில்லை.

மஹிந்த புலி பயத்தைக் காட்டிக் காட்டியே ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்கிறார். வடக்கில் சிறு சத்தம் கேட்டாலும் இதோ புலிகள் வந்துவிட்டனர் என்று கூறுகின்றனர். வடக்கில் புலிகள் உருவார்கள் என்ற பயத்தை தெற்கில் ஊட்டி ஊட்டியே மஹிந்த ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கின்றார்.

மஹிந்த இருந்தால் புலிகள் வரமாட்டார்கள் என்றொரு கருத்தை தெற்கில் விதைப்பதன்மூலம் மக்கள் மஹிந்தவை மீண்டும் ஆதரிப்பர் என்று அவர் நினைக்கின்றார். வடக்குத் தமிழரை விடவும் மஹிந்தவே புலிகள் மீண்டும் வருவதை விரும்புகின்றார். புள்ளிகளைத் தவிர வேறு எதுவும் மஹிந்தவுக்குத் தெரியாது.வேறு எந்தத் தலைப்பையும் வைத்து அவருக்கு அரசியல் செய்யத் தெரியாது.

இவ்வாறான அரசியல்வாதிகளிடம் மீண்டும் நாட்டைக் கொடுக்கவும் முடியாது. இப்போது ஆட்சி செய்கிறவர்களை நீடிக்க விடவும் முடியாது. அடிமட்ட மக்களிடம் அதிகாரம் செல்கின்றபோதே இந்த நாடு அபிவிருத்தி அடையும். அதுவரை நாம் இவ்வாறு போராட வேண்டியதுதான்.-என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *