பிரதான செய்திகள்

மலையக தமிழ் கட்சிகளை இணைக்க இந்தியா பல சதி திட்டம்!

தமிழ் முற்போக்கு கூட்டணியையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளில் இந்திய இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கை முகம் கொடுத்து வரும் நெருக்கடி நிலைமைகளை எடுத்துரைத்து இவ்வாறான நிலையில் தனித்தனியாக பிரிந்து செயல்படுவதை விட இரு கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுத்தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

குறிப்பாக அடுத்த பொதுத் தேர்தலில் இரு கட்சிகளும் ஒன்றிணைந்து  களம் இறங்கினால் வடக்கு கிழக்குக்கு வெளியில் இந்திய வம்சாளி மக்கள் வாழும் மாவட்டங்களில் இருந்து அதிகளவான பிரநிதிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்ப முடியும் என இந்தியா திட்டம் வகுத்துள்ளதாம். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸையும் தமிழ் முற்போக்கு கூட்டணியையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளில் இந்திய அரசாங்கம் இறங்கியுள்ளதோடு இந்த முயற்சிகளுக்குப் பின்னால் வெவ்வேறு தரப்பிரின் இணக்கங்களும் ஒத்துழைப்புகளும் இருப்பதாக தெரிய வருகின்றது.

Related posts

மேலும் பல புதிய வசதிகளுடன் WhatsApp

wpengine

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பு மனுக்கள் இரத்து?

Editor

மக்கள் உள்ளாடைகளை அணியாமல் தியாகம் செய்ய வேண்டும் – கொள்கைக்கு ஆதரவளிக்க வேண்டும்

wpengine