Breaking
Sat. Apr 27th, 2024
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5,6,7 ஆம் திகதிகளில் மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச பொருளாதார, முதலீட்டு மற்றும் புனரமைப்பு மாநாட்டில் இலங்கை சார்பில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொள்ளவுள்ளார்.

பேராக்; மாகாண முதலமைச்சரின் நிறைவேற்று அதிகாரி டாக்டர். மஸலன் கமிஷ் மற்றும் மலேசியா சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான நிறைவேற்று அதிகாரி சாஹ_ல் ஹமீட் தாவூத் உள்ளிட்ட குழுவினர் இன்று (10.05.2016) காலை  இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை அமைச்சின் காரியாலயத்தில் சந்தித்து மலேசிய அரசு சார்பில் மாநாட்டுக்கான விசேட அழைப்பிதழை வழங்கினர்.
அழைப்பினை ஏற்றுக் கொண்ட இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இலங்கை சார்பில் மாநாட்டில் பங்கேற்பதாக உறுதியளித்தார். bba83c4a-f052-4d03-90d3-b176f3627c6d
இந்த மாநாடு சர்வதேச ரீதியில் மலேசியாவுடனான கல்வி, பொருளாதாரம், அரசியல், சமூகம், விஞ்ஞான, தொழிநுட்பம் துறைகளில் தொடர்புகளை மேம்படுத்தவும், மாநாட்டில் பங்கு கொள்ளும் சிறிய நாடுகளுக்கு  பொருளாதார உதவிகளை பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

அந்த வகையில் இந்த வருடம் இலங்கை சார்பில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொள்வதன் ஊடாக பொருளாதார முதலீடுகள் தொடர்பில் மலேசியா முதலீட்டாளர்கள் மற்றும் அரச தரப்பினருடன் விசேட கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *