பிரதான செய்திகள்

மர்ஹூம் பாயிஸின் மறைவு பெரும் இழப்பு – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அனுதாபம்!

புத்தளம் நகரசபை தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதியமைச்சருமான கௌரவ பாயிஸ் அவர்களின் மரணச் செய்தி பேரதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

புத்தளம் நகரசபைத் தலைவர் பாயிஸ் அவர்கள் சிறந்ததொரு சமூக சேவகராக, நல்ல ஒரு அரசியல்வாதியாக செயல்பட்டவர்.

துணிவும் ஆற்றலும் ஒருங்கே அமைந்த அன்னாருடைய இறப்பு, புத்தளம் மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்குமே ஒரு பெரிய இழப்பாகும்.

இந்த சந்தர்ப்பத்தில் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவிப்பதுடன், அல்லாஹ் அவருடைய மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாக எனப் பிரார்த்தனை செய்வதோடு, இந்த அனுதாபச் செய்தியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எஸ்.சுபைர்தீன்.
செயலாளர் நாயகம்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.

Related posts

நுண்கடனுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

ஞானசார தேரருக்கு மாத்திரம் அமைச்சர் றிஷாட் இனவாதி!

wpengine

உடவளவை நீர்த்தேக்கத்தில் 5 வான்கதவுகள் திறப்பு

wpengine