பிரதான செய்திகள்

மருத்துவ பீட மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

மருத்துவ பீட மாணவர்கள் கொழும்பில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்கள்.

நாட்டில் உள்ள 6 பல்கலைக்கழகங்களிற்கு முன்னால் 100க்கும் மேற்பட்ட நாட்களாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

மாலபே தனியார் பல்கலைக்கழகத்தினை அரசு மூடவேண்டும் என கோரிக்கை விடுத்தே மாணவர்கள் இந்த தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் போராட்டத்திற்கு அரசு எதுவித நடவடிக்கையும் எடுக்காதமையினால் மாணவர்கள் கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

இதன்போது கருத்து தெரிவித்த மருத்துவ பீட தலைவர் ரயன், அரசு எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை ஏற்காது உள்ளது. மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் ஒரு முடிவும் எடுக்கவில்லை என குறிப்பிட்டார்.

அத்தோடு அரச மருத்துவ பீட மாணவர்களுடைய இறுதியாண்டு பரீட்சை முடிவடைந்துள்ளது. ஆனால் மருத்துவ பீட மாணவர்களுடைய கோரிக்கைகளை செவிமடுக்காதுள்ளாதக குற்றம் சுமத்தினார்.

மேலும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாக்கிரகம் நாளை மதியம் ஒரு மணிவரை தொடரும் என தெரிவித்தார். இதற்கும் அரசு உரிய பதிலளிக்காது விட்டால் இதைவிட போராட்டங்கள் தீவிரமடையும் என மருத்துவ பீட தலைவர் ரயன் மேலும் தெரிவித்தார்.

Related posts

சர்ச்சைக்குரிய லேடி ரிஜ்வே சிறுநீரக சிகிச்சை விவகாரம் – ஜனாதிபதிக்கு அசாத் சாலி கடிதம்!

Editor

அரசாங்கம் பதவி விலக வேண்டும், இவர்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது

wpengine

வடக்கு கிழக்கில் சேதமடைந்த விகாரைகள் சமய தலங்களை புனரமைக்க நடவடிக்கை

wpengine