பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் மீனவர்கள் மீன்பிடிக்க முடியவில்லை!ஏனையவர் மீன் பிடிக்கின்றார்கள்

மன்னார் மாவட்ட மீனவர்கள் கடற்றொழிலை மேற்கொண்டு வருவதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.ஆனால் வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் மன்னாரில் சுதந்திரமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மாவட்ட தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.


மன்னார் மாவட்ட மீனவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் ஏற்பாட்டில்,அதன் மாவட்ட இணைப்பாளர் பெனடிற்குரூஸ் தலைமையில் இன்று மன்னாரில் உள்ள அலுவலகத்தில் விசேட ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.


இதன்போது கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,


கடந்த காலங்களில் மன்னார் மாவட்ட மீனவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து வந்துள்ளனர். ஆனால் தற்போது கொரோனா தொற்றின் காரணமாகவும் மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.


தற்போது மன்னார் மாவட்ட மீனவர்கள் ஒட்டுமொத்தமாக சில பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அட்டை,சங்கு பிடிப்பதில் மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.


அட்டை,சங்கு பிடிக்கும் தொழிலானது தற்போதைய பருவ காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தொழிலாக உள்ளது.ஆனால் குறித்த தொழில் தற்போது அரசினால் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொழிலை சிலின்டர் மூலம் அலங்கார மீன் பிடித்தல் என்ற வகையில் அதற்கான அனுமதி அரசினால் வழங்கப்பட்டுள்ளது.


சாதாரண மீன்பிடி தொழிலாளர்களுக்கு குறித்த தொழிலை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இதனால் அரசாங்கம் வட பகுதி மக்களை பாராமுகமாக பார்க்கின்றமை உண்மையாக உள்ளது.தென் பகுதியில் இருந்து இங்கு வந்த கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தமது தொழிலை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் உள்ளூர் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பது தடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக குறித்த பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.எனவே மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில் டக்ளஸ் தேவானந்தா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது மீனவர்கள் பிடிக்கின்ற மீன்களின் விலை குறைவடைந்துள்ளது.ஒரு கிலோ மீன் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை செல்கின்றது. திட்டமிட்டு அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு மாயை என்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.


காரணம் பேலியகொடை என்கின்ற மீன் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட ‘கொரேனா’ வைரஸ் தொற்று மீன்களின் ஊடாக பரவப்பட்டுள்ளதாக மக்கள் நினைக்கின்ற அளவிற்கு அரசு ஒரு மாயையினை தோற்றுவித்துள்ளது.
மீன்களின் விலையின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது.

எனவே மீன்கள் ஊடாக எவ்வித கொரோனா தொற்றுக்களும் ஏனைய பிரச்சினைகளும் ஏற்படவில்லை என்பதை இந்த அரசு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

ரணில் திருடன் தாக்குதல்! பாராளுமன்றம் ஒத்திவைப்பு

wpengine

வீட்டுக்கு வீடு மரம் நடுகை திட்டம் வவுனியா செட்டிகுளத்தில் ஆரம்பம்

wpengine

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் அதிகளவான இடம்மாற்றங்கள் வழங்கப்பட்ட முதல் சந்தர்ப்பம்.

Maash