பிரதான செய்திகள்

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அமைச்சின் செயலாளராக நியமனம்

தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழி அமைச்சின் செயலாளராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய எம்.வை.எஸ்.தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களாக அரசாங்க அதிபராக கடமையாற்றி பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வந்த நிலையில் அவர் நேற்று செவ்வாய்க்கிழமை (13) தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழி அமைச்சின் செயலாளராக நியமனம் பெற்றுச்சென்றுள்ளார்.

இவர் இன்று புதன் கிழமை(14) தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழி அமைச்சில் தனது பதவியை பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கான பிரியாவிடை நிகழ்வு கடந்த திங்கள் கிழமை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், 2016 ஆண்டுக்குப்பின்னர் இன்று இலங்கை வருகிறர்.

Maash

சமூக ஊடகம்! அரேபிய வசந்தமும்,டிசம்பர் மழையும் வினுப்பிரியா தற்கொலையும்!

wpengine

வடமாகாண கல்வி அமைச்சராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமனம்

wpengine